ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - மகரம்

துணிச்சலுடனும், விவேகமுடனும் காரியமாற்றி வரும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் மூன்றில் ராகுவும், பாக்கியஸ்தானத்தில் கேதுவும் அமர்வது பல காலம் காத்திருந்த காரிய அனுகூலம் பெற நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
 
எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். அரசியலில் இருந்து பல சாதனைகளை செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 
 
பொது வாழ்வில் மற்றவருக்கு உதவி செய்வதில் முக்கியத்துவம் பெறுவீர்கள். மூன்றாமிடத்தில் ராகு யோக ராகுவாக அமர்ந்து ராசியை பார்ப்பது உங்களுக்கு தைரியத்தையும், துணிச்சலையும் பெற்றுத் தரும்.
 
எதையும் சாதித்து காட்டும் திறமை வெளிப்படும். கலைத் துறையில் புதிய சாதனைகளை உருவாக்கும் சந்தர்ப்பம் உண்டாகும். குரு வீட்டில் ராகு இருப்பது, மறைமுகமான பல நன்மைகளை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை முயற்சிகள் நன்மை தரும். 
 
விசா கிடைக்காமல் தாமதமானவர்களுக்கு விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். பகையாளி கூட உறவாடுவார்கள். எதிரிக்கு கூட நீங்கள் உதவி செய்வீர்கள்.
 
பாக்கியஸ்தானத்தில் கேது அமர்வதால், உங்களின் லட்சிய கனவுகளை செயல்படுத்தும் வாய்ப்பைப் பெறுவீர்கள். ஆன்மீக வழிபாடுகள். மகான்களை சந்திப்பது. குரு மார்களின் ஆசீர்வாதம். தீர்த்த யாத்திரை சென்று வருதல் கோவில், திருப்பணிகளில் பங்குபற்றி சேவை செய்யும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
 
தந்தை வழியில் சொத்து விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு கடல் கடந்து பயணம் செய்யும் சந்தர்ப்பம் அமையும். தொழிலிலும், உத்தியோத்திலும் முன்னேற்றம் பெற்று வளம் பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
வெள்ளிக்கிழமைகளில் நாகம்மன் வழிபாடு, அஷ்ட நாக தோத்திரம், கருட காயத்ரி, சொல்லிவர.. வாழ்வில் வளம் பெறுவதுடன், பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்.